தமிழ்த்தாய் வாழ்த்து...
குறுமுனி வரைதோன்றி உடனி தம்தரும்சிறுகால் உலவுநிறை தண்டலை விளங்கத்
தேறல்சேர் தோடு மலரமது கரமொலிக்கும்
சேரல் தென்னவன் மலரணையில் திகழ்தரும்
நறைநிறை மாந்தளிர் மேனியளே! வாழியவே!
- மதுரன்
அருஞ்சொற்பொருள்
குறுமுனி - அகத்தியர்
வரை - மலை
சிறுகால் - தென்றல்
நிறை தண்டலை - மேன்மையான பூஞ்சோலை
தேறல், நறை - தேன்